நாள் : 10.06.10
கோவையில் சூன் 23 முதல் 27 வரை நடைபெற்ற உலகக்தமிழ்ச் செம்மொழி மா நாட்டிற்காக தஞ்சையில் சூன்10-2010 அன்று செம்மொழி விழிப்புணர்வு பிரச்சார தொடர் ஓட்டத்தில் பாரத் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் மற்றும் தஞ்சையில் உள்ள அனைத்து கல்லூரிகளும் பங்க்கேற்றன. தொடரோட்டத்தை தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மாண்புமிகு ளு.கே.ஆ. உபயதுல்லா அவர்களும், தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் உயர்திரு.ம.சு.சண்முகம் அவர்கள் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர். |
நாள் : 15.06.2010
சூன் 15, 2010 அன்று உலகக்குருதி கொடையாளர் தினம் கொண்டாடப்பட்டது.(உலகக்குருதி கொடையாளர் தினம் சூன் 14) தஞ்சை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு விழிப்புணர்வு சங்கமும், டெல்டா ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்தின. இதில் பாரத் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களும் செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து பேரணியாக நம்து பாரத் கல்லூரி வளாகத்தில் உயர்திரு. மாவட்ட ஆட்சித் தலைவர் ம.சு.சண்முகம் அவர்கள் தலைமையேற்று பேரணியைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். |
நாள் : 15.09.2010
செப்டம்பர் 15, அன்று தஞ்சாவூர் அரசு பார்வையற்றோருக்கான உயர் நிலைப்பள்ளியில் 15.09.2010 முதல் 04.10.2010 வரை நடைபெற்ற காலாண்டு தேர்வில் நமது காலாண்டு தேர்வில் நமது கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்கள் 22 பேர் சென்று 7 நாட்களும் காலை, மாலை இரு நேரங்களிலும் மாணவர்களுக்கு தேர்வு எழுத மிகவும் உறுதுணையாக செயல்பட்டனர். |
நாள் : 21.12.2010
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தஞ்சை பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரி இணைந்து நாட்டு நலப்பனீதிட்டத்தின் சிறப்பு முகாமை தஞ்சை நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் 21.12.2010 முதல் 27.12.2010 வரை ஏழு நாட்கள் நடத்தின. |
| |
| |
|
|
| |
|